• Jan 19 2025

ஒரு வீடியோவால் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் அழவைத்த பிக்பாஸ்! வைரலாகும் வீடியோ!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 8 இன்றுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் விஜய் டிவி தற்போது பிரன்ஷிப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


பிக்பாஸ் சீசன் 8 இல் இறுதி போட்டிக்கு முத்து குமரன் ,பவித்ரா ,ரயான் ,சவுந்தர்யா ,விஷால் ஆகியோர் தெரிவாகியிருந்தனர். அநேகமாக அடுத்த நாளுக்கான எப்பிசோட்டினை பிக்போஸ் டீம் முதல் நாளே எடுத்து முடித்துவிடுவார்கள் அந்தவகையில் இறுதி முடிவு குறித்து ஒரு சில செய்திகள் கசிந்து வருகின்றன. 


அந்த வகையில் முத்துக்குமரன் டைட்டில் வெற்றியாளர் , விஜேவிஷால் ரன்னர். 2வது ரன்னர் சௌந்தர்யா, 3வது ரன்னர் ரயான், 4வது ரன்னர் பவித்ரா என்று செய்திகள் வலம் வருகின்றன. அதிகாரபூர்வமான வீடியோ இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் டிவி தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களின் பிக்பாஸ் பயணத்தை எடுத்துக்காட்டும் விதமாக பிரன்ஷிப் வீடீயோவை வெளியிட்டுள்ளது. 


அந்த வீடியோவில் பிக்பாஸ் சீசன் 8 அணைத்து போட்டியாளர்களும் இருக்கிறார்கள். பிக்பாஸ் " இந்த வீட்டில் ஒருத்தர் தான் வெற்றியாளர். ஒருத்தருக்கு தான் கப்பு. நீங்க உங்களை முன்னிலைப்படுத்தனும். இப்படி தொடக்கத்தில் இருந்து எவ்ளவோ சொல்லப்பட்டது அதுதான் உண்மையும் கூட, ஆனா இதுக்கு இடையில் தெரிஞ்சோ தெரியாமலோ பல நட்புகள் இந்த வீட்டில் உருவாக தவறியது இல்லை.


அதே நட்பு வெளியே சென்ற பிறகும் இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இப்படி இந்த வீட்டில் நீங்கள் நட்பு பாராட்டிய தருணங்கள் தொடர்பான வீடியோ தான் இது"  என்று பிக்பாஸ் நினைவுகள் தொடர்பான வீடீயோவை போடுகிறார். அதனை பார்த்து போட்டியாளர்கள் கண்கள் கலங்கி பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement