விஜய் டிவி தொலைக்காட்சி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் புகழ். இவர் தற்போது காமெடியனாக கலக்கி வருகிறார். இந்நிலையில் தனது மனைவி பென்ஷியின் பிறந்த நாள் முன்னிட்டு அழகிய புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி கலக்கப்போவது யாரு, அது இது எது, குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளில் தனது காமெடி திறமையை வெளிக்காட்டி இன்று சிறந்த காமெடியனாக வலம் வருகிறார் புகழ். இவரின் காமெடிக்கு சிரிக்காத நபர்கள் இல்லை. இடத்துக்கு ஏற்றால் போல டைமிங் காமெடி அடித்து பார்ப்போரை சிரிக்க வைப்பார்.
இவருக்கு குக் வித் கோமாளி ஷோ தான் நல்ல ரீச் கொடுத்தது. தற்போது கலக்க போவது யார் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். அத்தோடு ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்து தனது பயணத்துக்கு உறுதுணையாக இருந்த தனது காதலி பென்ஷியை திருமணமசெய்து கொண்டு பெண் குழந்தையுடன் சந்தோசமாக இருக்கிறார்.
இந்நிலையில் தனது மனைவி பென்சிலின் பிறந்தநாள் முன்னிட்டு அழகிய புகைப்படங்களை பகிர்ந்து " தவம் இல்லாமல் கிடைத்தவள் நீ தேடாமல் தேடி வந்த வரமும் நீ, எனது இருளில் கிடைத்த வெளிச்சம் நீ ,எனது வாழ்க்கையில் பெரும் பொக்கிஷம் நீ, எனது வாழ்க்கையின் மறு பாதி நீ,என்னவளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். " என உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!