• Dec 26 2024

பசங்களுக்கு இப்படி காட்டுறது தான் ரொம்ப பிடிக்கும்.. பிக்பாஸ் நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வரும் நிலையில் பெரும்பாலும் அவை கலாய்க்கும் வகையில் தான் உள்ளது.

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் நடிகை ரைசா வில்சன் என்பதும் இவர் இந்த நிகழ்ச்சியில் 63 நாள் தாக்குப்பிடித்தார் என்பதும் தெரிந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ’பியார் பிரேமா காதல்’ ’தனுசு ராசி நேயர்களே’ உள்பட சில படங்களில் நடித்த நிலையில் தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் ரைசா வில்சன் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒன்றரை மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ளார் என்பதும் அவ்வப்போது அவர் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு கலரில் சேலை அணிந்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் அளவுக்கு மீறி கவர்ச்சியாக இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் பலர் கேலியும் கிண்டலம் செய்து வருகின்றனர்.

’இப்படி ஒரு சேலை அணிவதற்கு பதிலாக ஒன்றுமே அணியாமல் இருக்கலாமே, அதுதான் எல்லாமே நன்றாக தெரிகிறதே’ என்று கலாய்த்து வருகின்றனர். மேலும் பசங்களுக்கு முழுவதுமாக காட்டினால் பிடிக்காது, இப்படி அரைகுறையாக காட்டினால் தான் பிடிக்கும்’ என்றும் ’இது தான் கிக்’ என்றும் சிலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்..

’திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படம் பதிவு செய்வது தான் இன்றைய ஒரே டெக்னிக்’ என்றும் ’இப்படியே போனால் எல்லை மீற வேண்டிய நிலை வரும்’ என்றும் சிலர் எச்சரித்து வருகின்றனர்.

இருப்பினும் ’இந்த புகைப்படத்தில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், புடவையில் நீங்கள் மிகவும் அம்சமாக இருக்கிறீர்கள்’ என்பது போன்ற பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது. மொத்தத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வாய்ப்புகளை தேடும் ரைசா வில்சனின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா? தமிழ் திரை உலகில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement