• Jan 24 2025

வில்லனால் முத்துவை அள்ளிச்சென்ற பொலிஸார்! வாங்கிக் கட்டிய மனோஜ்?ரோகிணி சாதித்த காரியம்

Aathira / 6 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசொட்டில், ரோகிணி தனது அம்மாவிடமிருந்து தனது அப்பாவின் போட்டோவை வாங்கி எடுக்கின்றார். இதன் போது ரோகிணியின் அம்மா, நீ தப்புக்கு மேல தப்பு பண்றா.. பொய் சொல்லி ஒரு நாள் மாட்டப் போகிறாய் என்று அட்வைஸ் பண்ண, என்ட வாழ்க்கையை பார்க்க எனக்கு தெரியும் என அவருக்கு திட்டி விட்டு செல்கின்றார்.

அதன் பின்பு வீட்டுக்கு போன ரோகினி போட்டோவை காட்டி கதறி அழுகின்றார். இதையெல்லாம் நம்பிய விஜயா அவருக்கு ஆறுதல் சொல்லுகின்றார். மேலும் மனோஜ் நான் இருக்கின்றேன் என்று ஆறுதல் சொல்லுகின்றார். 

அதன் பின்பு மனோஜ் ரோகினியின் அப்பாவுடைய போட்டோவுக்கு பூ மாலை போட்டு கும்பிடுகின்றார். அந்த நேரத்தில் விஜயா உங்களுடைய சொத்து எல்லாம் உங்க மகளுக்கு சேர்ந்தால் தான் உங்க ஆத்மா சாந்தியடையும் என்று சொல்ல, இதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைய, ஸ்ருதியும் இந்த டைமில் இப்படியா பேசுவது என ரவியிடம் சொல்லுகின்றார்.


இன்னொரு பக்கம் செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியின் கடையை டிராபிக் பொலிஸார் வந்து மொத்தமாக தூக்குகின்றார்கள். இதன் போது அவர்கள் கெஞ்சவும் அவர்கள் கொஞ்சமும் இரக்கம் காட்ட வில்லை. 

அந்த நேரத்தில் முத்துவும் மீனாவும் அங்கு வருகின்றார்கள். அதில் நடந்த தகராறில் டிராபிக் போலீஸ் பாட்டியை கீழே தள்ளி விடுகின்றார். இதனால் பாட்டிக்கு தலையில் அடி பட, முத்து கோவத்தில் டிராபிக் போலீஸ்சாரின் காலரை பிடிக்கின்றார்.

அதன் பின்பு தாத்தா பாட்டியை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு சீதாவிடம் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லுகின்றார். மேலும் பாட்டிக்கு ரத்தம் தேவை என்பதால் எல்லா இடத்திலும் விசாரிக்க சொல்லுகின்றார்கள். 


இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்து ரோகிணி அப்பாவின் புகைப்படத்தை பார்த்ததும் இவரைப் பார்க்க மலேசியால இருந்த மாதிரி இல்லையே.. பக்கத்து வீட்டு காரர் போல இருக்கிறார் என்று சொல்ல, விஜயா உடனே போட்டோவை தூக்கி மீண்டும் பார்க்கின்றார்.

அதற்கு ரோகிணி இது பிசினஸ் பண்ணுவதற்கு முதல் எடுத்தது அப்படி என்று சமாளிக்கின்றார். அதன் பின்பு மனோஜ்க்கு பாட்டியின் ரத்த குரூப் இருப்பதால் ரத்தம் கொடுக்குமாறு சொல்ல, அவர் மறுக்கின்றார். அந்த நேரத்தில் முத்து வீட்டுக்கு போலீஸ் வருகிறது. டிராபிக் போலீசுடன் சண்டை போட்டதால் முத்துவை அரெஸ்ட் பண்ணி கூட்டிப் போகின்றார்கள்.

போலீஸ் ஸ்டேஷனில் முத்து இருக்கும்போது மீனாவும் கூடவே வந்து விடுகின்றார். அந்த நேரத்தில் மனோஜம் ரோகிணியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகின்றார்கள். அங்கு முத்துவை பார்த்து மனோஜ் ஏளனமாக கதைக்கின்றார். அதன் பின்பு போலீசாரிடம் தமது 30 லட்சம் பிரச்சனையை கேட்க , அவர்கள் இன்ஸ்பெக்டர் வரவேண்டும் என்று சொல்லுகின்றார்கள்.

இதனால் மனோஜ் ஒரு போலீஸ்காரரை ஓரமாக கூட்டிப் போய் காதில் எதுவோ சொல்ல, அவர் பளார் என மனோஜ்க்கு அறைந்து விடுகின்றார். அதைப்பற்றி கேட்ட இன்னும் இரண்டு பொலிஸாரும்  மனோஜுக்கு மாறி மாறி அறைந்து விட்டு செல்கின்றார்கள். இறுதியில் ரோகினி மனோஜிடம் என்ன நடந்தது என்று கேட்க, மனோஜ் சொன்ன விஷயத்தை கேட்டு அவரும் மனோஜ்க்கு அடிக்க செல்கிறார்.

இறுதியில் இன்ஸ்பெக்டர் வந்ததும் முத்துவை பிடித்து விசாரிக்க, முத்து நடந்தவற்றை சொல்லுகின்றார். மேலும் டிராபிக் அதிகாரி பாட்டியை தள்ளிவிட்டு அவர் ஹாஸ்பிட்டலில் இருப்பதாக சொல்ல, குறித்த டிராபிக் அதிகாரி வந்ததும் பாட்டியை தள்ளி விட்டாயா? இவங்க ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா உங்க சட்டை கிழிந்து விடும் என்று வார்னிங் பண்ணி அனுப்புகின்றார். இதனால் முத்துவையும் விடுதலை செய்கின்றனர். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement