• Jan 24 2025

அவங்களும் வேணும் இவங்களும் வேணும்னா? தோற்றுப்போன இனியா..ராதிகாவுக்கு நேர்ந்த துயரம்?

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியா  பெற்றோரை மேடைக்கு அழைக்க அங்கு ராதிகாவும் கோபியுடன் கூட வருகின்றார். இதனால் இது என்ன வித்தியாசமான குடும்பம் என்று எல்லோரும் இனியாவை கேலி பண்ணி சிரிக்கின்றார்கள். 

அதன் பின்பு இனியாவை பாக்யா தனியாக சென்று சமாதானப்படுத்த, அங்கு கோபியும் வருகின்றார். இதனால் கோபி மீது கோபப்பட்ட இனியா ஏன் இப்படி பண்ணுனீங்க? என்கூட பேச வேண்டாம்.. என்னை தனியாக விட்டு விடுங்கள் என்று  அழுகின்றார். அதன் பின்பு இனியாவின் நண்பர்களும் ராதிகாவுடன் போட்டோ எடுக்கலாமா? என கேட்டு இனியாவை அசிங்கப்படுத்துகின்றார்கள்.

இதை தொடர்ந்து டான்ஸ் காம்படிஷன் நடக்கும் போது அதில் இனியா சரியாக  ஆட முடியாமல் திணறுகின்றார். இதை பார்த்து சபையில் உள்ளவர்கள் சிரிக்கின்றார்கள். இறுதியில் இனியாவுக்கு  மூன்றாவது பரிசு கிடைக்கின்றது.


இதை அடுத்து வீட்டுக்கு வந்த இனியா கத்தி குளறி ஆர்ப்பாட்டம் பண்ணுகின்றார். மேலும் ராதிகா யார் எனக்கு? எதற்காக அவரை கூட்டி வந்தீர்கள்? அவங்க நல்லவங்களை கிடையாது.. அவங்களால தான் எல்லா பிரச்சனையும் என்று எல்லை மீறி பேசுகின்றார்.

மேலும் ராதிகா எங்க குடும்பத்துக்கு வேண்டாம். அவ வந்தாலே பிரச்சனைதான். அவரால் பாட்டிக்கு பிரச்சனை.. எனக்கு பிரச்சனை.. அம்மாவுக்கு பிரச்சனை.. எல்லாருக்கும் பிரச்சனை என்று பேச, பாக்கியா இனியாவை தடுக்கின்றார். ஆனாலும் ராதிகா இனியாவிடம் மன்னிப்பு கேட்டு செல்கின்றார்.

இறுதியில் பாக்கியா நடந்த எல்லாத்துக்கும் காரணம் உன்னுடைய அப்பா தான். ராதிகா ஆபீஸ் போவதாக சொல்ல, அவர்தான் கூட்டி வந்தார்.. அவர்தான் மேடைக்கு ஏற்றினார்.. அவர் மீதுதான் எல்லா பிழையும்... ஒருத்தர் விருப்பப்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கு எந்த தடையும் இல்லை.. ஆனால் இரண்டு வீடும் வேணும் என்று பேராசைப்படுவதில் தான் எல்லா பிரச்சனையும் என்று கோபிக்கு பதிலடி கொடுக்கின்றார்.

Advertisement

Advertisement