• Dec 26 2024

'மழை பிடிக்காத மனிதன்' படக்குழுவை சீண்டும் புளு சட்டை மாறன்.

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தொடர்ந்து திரையரங்குகளில் ஓடியவண்ணம் உள்ளது.இந்நிலையில் படத்தின் திரையிடலில் சர்ச்சைகள் தோன்றியிருந்தன.

May be an image of text

படத்தின் ஆரம்ப காட்சிகளின் முதல் இரண்டு நிமிட காட்சிகள் இயக்குனரின் அனுமதியின்றி அவருக்கு தெரியாமல் வைக்கப்பட்டுளதெனவும் இந்த படம் சலீம் 2 இல்லை எனவும் நடிகர் விஜய் ஆண்டனி அறிக்கையொன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.

May be an image of text

குறித்த பதிவு இடப்பட்டு சில மணி நேரங்களிலேயே பிரச்சனை முடிக்கப்பட்டதெனவும் குறித்த காட்சி இன்று முதல் இல்லாமல் செய்யப்பட்டு படம்  திரையரங்குகளில் வழமை போல் ஓடும் எனவும் மக்கள் அனைவரும் திரையரங்குகளில் படத்தை பார்வையிட்டு ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார் நடிகர் விஜய் ஆண்டனி.


இந்நிலையில் குறித்த பதிவுகள் அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து "படத்தை ஒழுங்கா எடுக்க சொன்னா... Hard disk தொலஞ்சி போச்சி, எனக்குத்தெரியாம 1 நிமிஷ சீனை சேத்துட்டாங்கன்னு கம்பி கட்ற கதையை சொல்ல வேண்டியது." என்ற பதிவுடன் படக்குழுவை சீண்டுகிறார் இயங்குனர் மற்றும் யூடீயூபரான புளு சட்டை மாறன்.



Advertisement

Advertisement