• Dec 26 2024

கெட்ட வார்த்தைகளால் சமுத்திரக்கனியை திட்டிதீர்த்த வனிதா! அந்தகன் விழாவில் அதிர்ச்சி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கும் திரைப்படம் தான் அந்தகன். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரைக்கு ரிலீசாக உள்ளது.

இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, மனோபாலா, ஊர்வசி, யோகி பாபு, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிகவும் பெரிய அளவில் காணப்படுகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து எதிர்வரும் ஒன்பதாம் தேதி திரைக்கு வரவுள்ளது.

அந்தகன் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா  என்பன சென்னையில் நேற்றைய தினம் நடந்தது. இந்த விழாவில் தியாகராஜன், பிரசாந்த், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், சிம்ரன், சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

குறித்த விழாவில் சமுத்திரக்கனி கூறுகையில், நான் தியாகராஜரின் தீவிர ரசிகன். நான் தியேட்டரில் ஆபரேட்டராக பணி புரிந்து கொண்டிருந்தபோது மலையூர் மம்பட்டியான் படத்தை போட்டு பார்த்து ரசித்திருக்கின்றேன். அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு பயமும் மரியாதையும் இருக்கு. திடீரென ஒருநாள்  நண்பர் ஒருவர் எனக்கு போன் பண்ணி தியாகராஜன் சார்  உங்களிடம் பேச வேண்டுமாம் என்று கூறினார்.


ஏன் எதற்காக என்று கேட்பதற்குள் அவர் தியாகராஜனிடம் ஃபோனை கொடுத்து விட்டார். அவர் எடுத்ததும் நான் தியாகராஜன் பேசுறேன் என்று கூறினார். அதை கேட்டதும் நான் உடனடியாக நேரில் வரட்டுமா என்று கேட்க, பின்னர் விஷயத்தை கூறி படத்தில் நடிப்பதற்கு அழைத்தார். நானும் உடனடியாக சம்மதித்து படத்தில் நடித்தேன்.

அன்று முதல் எனக்கும் பிரசாத்துக்கு நல்ல தொடர்பு இருந்து வருகின்றது. இருவரும் ஐயா என்று தான் அழைப்போம். ஒரு நாள் வனிதா விஜயகுமார் கெட்ட வார்த்தைகளால் என்னை திட்டினார். தாங்க முடியாமல் நான் தியாகராஜனிடம் ஏன் வனிதா இப்படி திட்டுகின்றார் எனக் கேட்டேன்.

அதற்கு அவர் சிரித்துக் கொண்டே பதில் அளிக்கையில், நான் காட்சிக்காக கொஞ்சம் அவரை திட்டு என்று சொன்னேன். அவர் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளால் எப்படி எல்லாம் பேச வருமோ அப்படி எல்லாம் பேசி முடித்து விட்டார் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement