• Apr 12 2025

பெண்களைப் பற்றி எதை வேண்டுமானாலும் பேசலாமா.?விமர்சகர்களை எதிர்த்த பாலிவுட் நடிகை!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

'Sex Education' மற்றும் 'The White Lotus' போன்ற படங்களின் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த பிரபல பாலிவுட் நடிகை எமி லூ வுட், சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.


ரசிகர்கள் தனது பல் வரிசை குறித்து கதைக்கும் கடுமையான விமர்சனங்களை எதிர்த்து தன்னம்பிக்கையோடு பேசிய எமி லூ வுட் இன்று பெண்களின் சமூக அனுபவங்களை பிரதிபலிக்கும் ஓர் முக்கிய குரலாக மாறியுள்ளார். சமூக எதிர்பார்ப்புக்கள் மற்றும் பெண்களுக்கு விதிக்கப்பட்ட அழகு கட்டுப்பாடுகள் என்பவற்றை எமி லூ வுட் தனது பேட்டியில் சிறப்பாகக் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "எந்த ஒரு ஆண் நடிகரின் அழகு குறித்து எந்த விமர்சனங்களும் வந்ததில்லை  எப்பொழுதும் பெண்களின் அழகினைத் தான் அனைவரும் விமர்சிக்கின்றார்கள்." எனக் கூறியுள்ளார். இந்த உரை அவரது தனிப்பட்ட அனுபவத்தைத் தாண்டி உலகளவில் பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினையை வெளிப்படுத்துகின்றது.


இயற்கை அழகு மீது சமூகம் எத்தனை முறை விமர்சித்தாலும் எமி லூ வுட் தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது இந்தக் கருத்துக்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் "என் பல் வரிசை என் முகத்தின் அற்புதமான ஓர் பகுதி. அதை மாற்ற விரும்பவில்லை. அது என் சிரிப்பின் தனித்துவம்.என் பல் வரிசை குறித்த விமர்சனங்கள் எனக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியது. ஆனால் இன்று, நான் அதை நேசிக்கின்றேன். அது என் பயணத்தின் ஓர் பகுதியாகி விட்டது." என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement