• Dec 26 2024

மஞ்சுமல் பாய்ஸ் படம் பார்த்த மஞ்சள் சைட்டை பாய்ஸ்! CSK தல தியேட்டர் விசிட்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் உருவாகி மாபெரும் வெற்றி நடை போடும் திரைப்படம் "மஞ்சுமல் பாய்ஸ்" . மலையாளத்தில் 200 கோடி வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.  கமல்காசன் நடித்து வெளியாகிய "குணா" திரைப்படத்தில் முக்கிய காட்சியில் காட்டப்படும் "டெவில்ஸ் கிட்சன்" என்ற குகையை மையமாக கொண்டே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 


இவ்வாறே குறித்த இந்த திரைப்படம் மலையாளத்தை விட தமிழில் அதிக வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.  இத்திரைப்படத்தை பல சினிமா பிரபலங்கள் தியேட்டரில் சென்று பார்த்து இருந்தனர். பார்த்தது மட்டும் இன்றி இந்த படம் குறித்து தங்கள் கருத்துக்களையும்,பாராட்டுக்களையும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.


இந்த நிலையிலேயே இந்தியாவில் தற்போது நடைபெறும் "IPL கிரிக்கெட் தொடர்" ஆரம்பித்து முதலாவது போட்டியாக RCB vs CSK என்ற போட்டி நடைபெற்று முடிந்திருந்தது. இதில் வெற்றிபெற்றதும் CSK அணியினர் ஆவர். இந்த நிலையிலேயே வெற்றியை தொடர்ந்து "தோணி" மற்றும் "தீபக் சகார்" இருவரும் சென்னையில் உள்ள சத்தியம் திரையரங்களில் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தை பார்த்துள்ளனர்.  குறித்த அந்த புகைப்படங்கள் வைரலாகிய நிலையில் "மஞ்சுமல் பாய்ஸ் பார்த்த  மஞ்சள் பாய்ஸ்" என்ற மீம்சும் வைரலாகி வருகின்றது

Advertisement

Advertisement