• Dec 26 2024

காரி துப்பமாட்டாங்கனு நினைக்கிறேன்! உண்மையை உடைத்த லோகேஷ் அப்பா என் லிரிக்ஸ் கொஞ்சம் திருடிட்டாரு- சுருதிஹாசன்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியில் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரும் கமலஹாசனின் மகளான சுருதிகாசனும் இணைந்து நடிக்கும் ஆல்பம் சோங் ஆனது நாளை வெளியாக உள்ளது. இந்த  நிலையில் அது தொடர்பான பேட்டி ஒன்றை இருவரும்  இணைந்து வழங்கியுள்ளனர். 


லோகேஷ் கனகராஜ் இயக்குனராக மட்டும் இன்றி நடிகராகவும் ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளார். நடிகை சுருதிகாசனுடன் இணைந்து "இனிமேல்" என்ற ஆல்பம் சோங் இல் நடித்து வருகிறார் "ராஜ் கமல்" நிறுவனம் தயாரிக்கும் இந்த பாடலுக்கு கமலஹாசன் வசனம் எழுதி உள்ளார். இந்த நிலையிலேயே இந்த பாடல் தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். 


அதில் லோகேஷ் "நான் நடிப்பை பற்றி ஜோசித்ததே இல்லை , எனக்கு ஆர்வமும் இல்லை ஆனால் ராஜ் கமல் கேட்க்கும் போது என்னால் NO  சொல்ல முடியாது. முதல்ல சுருதி கதையை சொல்லும்போது நான் சிரிச்சுட்டேன் ஆனா போக போக எனக்கு இந்த மொத்த குழுவும் பிடிச்சுருக்கு , மக்கள் காரி துப்பாத அளவுக்கு பண்ணிருக்கன் என்று நினைக்குறேன்" என்று கூறியுள்ளார்.


மற்றும் சுருதிகாசன் "நான் இந்த சோங்ஐ  முதல்ல இங்லிஷ்லதான் எழுதி இருந்தேன் அப்பறமாத்தான் நான் அப்பாகிட்ட காட்டினேன் அப்பதான் அவர் தமிழ்ல எழுதினார் என்னோட லிரிக்ஸ் கொஞ்சம் பிடிச்சு போனதால அதையும் சேத்துக்கிட்டாரு" என்றும் கூறியுள்ளனர். 

Advertisement

Advertisement