• Dec 26 2024

Breaking News :- கேப்டன் மில்லர்'திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிகை பிரியங்கா நடித்த கேப்டன் மில்லர் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் தற்போது கிடைக்க பெற்றது. 


இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளனர். இந்த திரைப்படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 திகதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் தற்போது சட்டவிரோதமாக கேப்டன் மில்லர் திரைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது


அதாவது இவ்வாறு இணையதளத்தில் வெளியிடுவதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பாதிக்கபடுவார்கள் என்பதனால் இவ்வாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நீதிபதி அவர்களினால் 1166 இணையத்தளங்களில் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement