• Dec 26 2024

பிக் பாஸில் ஆரம்பிக்கப்பட்ட பிரீஸ் டாஸ்க்.. கதறியழுத பூர்ணிமா! யாரெல்லாம் வந்து இருக்காங்க தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 79 நாட்களைக் கடந்துள்ளது.பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சியை விட்டு சென்ற பிறகு இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்கமாட்டார்கள் என்றுதான் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு தான் நிகழ்ச்சியானது சூடு பிடிக்க ஆரம்பித்து ஒளிபரப்பாகி வருகின்றது.

மேலும் கடந்த வாரம் அனன்யா மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியேறியிருந்தனர். 


இந்த நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில்,பிக் பாஸ் சீசன் 7 க்கான  பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்படுகிறது.


அதில் முதலாவதாக பூர்ணிமாவின் அம்மா உள்ளே வர, பூர்ணிமா ஓடிச் சென்று தாயை கட்டிப்பிடித்து அழுகிறார்.

இதை தொடர்ந்து, போட்டியார்கள் அனைவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்படுகிறது. இறுதியில் அன்பால் நிறைந்தது பிக் பாஸ் இல்லம்.


Advertisement

Advertisement