• Dec 26 2024

சூப்பர் ஸ்டாருடன் பிக் பாஸ் சீசன் 7 பிரபலம்! அப்போவே செம மாஸ் காட்டிய போட்டோ வைரல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் சூப்பர் ஸ்டாராகவும் பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இன்று தமிழ் சினிமா இவ்வளவு பிரபலமாகவும் பெரிய மார்க்கெட் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.  இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 73 வயதை கடந்தும் இன்றளவும் ஸ்டைல் சாம்ராடாகவும் விளங்கிவரும் ஒரு ஒப்பற்ற நடிகர் ஆவார். 


இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததுடன் இளம் வயதில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்பொது வைரலாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் விசித்ரா. அவர் மூத்த தமிழ் திரையுலக நடிகையுமாவார்.


அதன்படி, சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான நடிகை விசித்ரா,  தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து வந்தார்.

எனினும், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'இரவு பாடகன்' என்ற திரைப்படத்தோடு தனது கலை பயணத்தை நிறுத்திக் கொண்டார். 


இதை தொடர்ந்து தனது குடும்பத்தோடும், பிள்ளைகளோடும் நேரத்தை செலவிட்டு வந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவர் இளம் வயதில் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement