• Jan 14 2025

ஷுட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிக் கொண்ட பிருந்தா மாஸ்டர்- காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக வருபவர் தான் பிருந்தா. இவர் பிரபல நடன இயக்குநர் கலாவின் சகோதரி என்பதும் யாவருக்கும் தெரிந்ததே. இவர் இயக்குநராக ஹே சினாமிகா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். தொடர்ந்து தக்ஸ் என்கிற தலைப்பில் தனது இரண்டாவது படத்தை இயக்கினார்.

ஹிருது ஹாரூன் நாயகனாக அறிமுகமான இப்படத்தில், பாபி சிம்ஹா, முனிஷ்காந்த், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது இவர், தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் கண்ணப்பா படத்தில் நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார். 


முகேஷ் குமார் சிங் இயக்கும் இப்படத்தில் பிரபாஸ், மோகன்லால் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.இந்த படப்பிடிப்பின் பாடல் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் பிருந்தா மாஸ்டருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் ரமேஷ் பிரபா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


பிருந்தா மாஸ்டருக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனால் ரசிகர்கள் அவர் விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்


Advertisement

Advertisement