• Dec 26 2024

நடிகர் ராகவா லாரன்ஸால் இப்படியும் பண்ண முடியுமா?- ஜிகர்தண்டா XX படம் குறித்து ஆச்சரியப்பட்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான்  ஜிகர்தண்டா டபுள் x.இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பாசிடிவ் விமர்சனங்களும் குவிந்து வருகின்றது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினி பாராட்டி கடிதம் எழுதி இருக்கிறார்.ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள் லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா.. என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது.


SJ சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும்  கலந்து அசத்தி இருக்கிறார்.கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார், பிரமிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழவும் வைக்கிறார். I am proud of you கார்த்திக் சுப்புராஜ், My hearty congratulations to கார்த்திக் சுப்புராஜ் and Team.


இவ்வாறு ரஜினி குறிப்பிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement