• Dec 26 2024

விஜய் டிவி சுனிதாவா இது?- ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மெலிந்து விட்டாரே- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


 விஜய் டிவியில் டான்ஸ் ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் சுனிதா. இதனைத் தொடர்ந்து ஆனால் அவர் அங்கிருந்து ட்ராக் மாறி தற்போது காமெடியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

குக்வித்கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாகக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானார்.சுனிதா வெளிமாநிலத்தவர் என்பதால் அவர் பேசும் இனிமையான தவறான தமிழ் மொழியை பார்க்கும் மக்கள் அடக்க முடியாத அளவிற்கு சிரிப்பு வரும்.


 இருந்தாலும், விடா முயற்சியினால் சிரிப்பு தமிழ் மொழியை கற்று வருகிறார். சுனிதா செய்யும் மொக்க காமெடிகளும், க்யூட்டா கொடுக்கும் எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இதனால் இவருக்கு என்று ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இந்த நிலையில் இவர் தீபாவளி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடியுள்ளார்.அப்போது புடவை அணிந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சுனிதாவா இது,இப்படி மெலிந்து விட்டாரே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement