• Dec 27 2024

குழந்தை பெத்துக்க முடியாதுனு விமர்சிக்கலாமா? நெப்போலியன் மகன் பற்றி செய்யாறு பாலா

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி வில்லனாகவும் நடிப்பில் மிரட்டியவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் அரசியலிலும் சிறந்து விளங்கி இருந்தார்.

நடிகர் நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் பிறக்கும் போது நல்ல ஆரோக்கியமாக பிறந்தார். எனினும் கிட்டத்தட்ட நான்கு வயது அளவில் அவருக்கு தசைச் சிதைவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

அதன் பின்பு தனது மகனுக்கு வைத்தியம் செய்வதற்காக அமெரிக்காவுக்கு சென்று அங்கேயே செட்டில் ஆக்கிவிட்டார். தற்போது அமெரிக்காவில் விவசாயத்தையும் ஊக்குவிக்கும் வகையில் 3000 ஏக்கரில் விவசாயத்தை செய்து வருகின்றார்.

சமீபத்தில் நெப்போலியன் மகன் தனுஷுக்கு 25 வயதாகும் நிலையில், அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதற்காக நெப்போலியலும் அவரது மனைவியும் இந்தியாவுக்கு வந்து அக்ஷயா என்ற பெண்ணை சம்பந்தம் செய்திருந்தார்கள்.


இதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனுஷால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது, ஒரு பெண்ணின் வாழ்க்கையை காசுக்காக கெடுக்கின்றீர்களே என தாறுமாறாக விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.

இந்த நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த செய்யாறு பாலா கூறுகையில், தனது மகனுக்கு இப்படி ஒரு வருத்தம் என்று தெரிந்ததுமே நெப்போலியனின் குடும்பம் உடைந்து போய்விட்டது. தனது மகனுக்காகவே சினிமா, அரசியல் எல்லாவற்றையுமே விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு சென்றார்.

அங்கும் தனது மகனுக்காக பார்த்து பார்த்து வீடு கட்டினார். ஒரு அம்மா, அப்பாவான இவர்கள் தனுஷை பார்த்துக் கொள்ளலாம் ஆனால் ஒரு மனைவி கணவனை பார்த்துக் கொள்வது போல வராது என்பதற்காகவே அவர்கள் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றார்கள்.

இந்த திருமணத்தை விமர்சிக்கலாமா? தனுஷால் நடக்க முடியாவிட்டாலும் அவருடைய வேலைகளை அவரே தான் செய்து கொள்கின்றார். தற்போது அவர் ஐடி கம்பெனி ஒன்றை நிர்வகித்து வருகின்றார் என செய்யாறு பாலா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement