• Dec 26 2024

ஊழியர்களுடன் விஜயதசமி கொண்டாடிய உயிர்-உலக்! ட்ரெண்டிங் வீடியோ இதோ...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நானும் ரவுடி தான் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் காதல் பயணத்தை தொடங்கிய நட்சத்திர ஜோடிகள் தான் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன். இருவரும் கடந்த 2022ம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் "காத்து வாக்குல இரண்டு காதல்" என்கிற திரைப்படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றினர். 


கடந்த 2022 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான அடுத்த ஆண்டு அவர்களுக்கு வாடகை தாய் மூலம் உயிர் மற்றும் உலகு என்று இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.


தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் விக்கி நயன் இருவரும், அதே நேரம் தனது குடும்பத்திற்காகவும் அதிக நேரத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இன்று விஜயதசமி திருநாளை முன்னிட்டு, தங்கள் வீட்டில் பணி செய்யும் பணியாளர்களுக்கு பரிசு வழங்கி அவர்களோடு இந்த திருநாளை கொண்டாடி இருக்கின்றனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. அத்தோடு தனது குழந்தைகள் மூலம் பரிசுகளை கொடுக்க வைத்து நன்றி கூறுமாறு சொல்லும் அழகிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement