• Dec 26 2024

ட்ரெண்டிங்கில் ஓவியா ஹேஷ்டாக்.. நேரடியாக பதிலடி கொடுத்து ஆப் பண்ணிட்டாங்களே..!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ஓவியா. இவர் அதன் பின்பு மெரினா, மூடர் கூடம், மதயானைக்கூடம் என பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் ஓவியா நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் பின்னர் மிகவும் கவனிக்கத்தக்க பிரபலமாக மாறினார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் ஏழு லட்சம் பேர் பின் தொடர்ந்து  வருகின்றார்கள். அத்துடன் பிக் பாஸ் மூலம்  பிரபலம் அடைந்த பின்பு இவருக்கு ஏராளமான ரசிகர்களால் ஓவியா ஆர்மி  என்ற பேன்ஸ் பேஞ்சும் உருவானது.

இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் அந்தரங்க வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகின்றது. மேலும் அதில் இருக்கும் பெண் ஓவியா தான் என்றும் கூறப்பட்டது. இதனால் ஓவியா என்ற ஹேஷ்டாக் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.

இதைத்தொடர்ந்து நடிகை ஓவியா நேற்றைய தினம் தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் கமெண்ட் செய்த ஒருவர் 17நொடிகளுக்கு வீடியோ வந்துள்ளது என்று கூற, அதற்கு ஓவியா என்ஜாய் என பதில் அளித்துள்ளார்.


மேலும் இன்னும் ஒரு நபர் வீடியோவின் நீளம் மிக குறைவாக உள்ளது என்ற கமெண்ட் பண்ண, அடுத்த முறை ப்ரோ என பதில் அளித்துள்ளார் ஓவியா. மேலும்  இன்னொருவரிடம் வீடியோ லிங்கையும் கேட்டுள்ளார். ஓவியாவின் இந்த பதிலடி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாதாரணமாகவே சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் வெளியானால் அது தாங்கள் இல்லை என கங்கணம் கட்டி வருவார்கள். ஆனால் ஓவியா அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் இப்படி நடந்து கொண்ட விதம் ரசிகர்களை மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியதோடு  ஒருவரின் தனிப்பட்ட  அந்தரங்க விடயத்தை பொது வெளியில் பகிர்வது தப்பு என ஓவியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement