• Dec 26 2024

கருங்காலியால் சிக்கிச் சின்னாபின்னமான பிரபலங்கள்! அட இந்த நடிகரும் லிஸ்ட்ல இருக்கேரா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தற்போதைய நாட்களில் பிரபலங்கள் மட்டுமின்றி சாதாரண நபர்களும் கருங்காலி மாலையை அணிய ஆரம்பித்துள்ளனர். இது லேட்டஸ் வியாபாரமாகவும் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் கருங்காலி அணிந்துள்ளதால் அவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். 

அந்த வகையில் சினிமா பிரபலங்களான சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், ஆகியோர்கள் கருங்காலி மாலையை அணிந்து தான் அனைத்து காரியங்களையும் ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் வழங்கிய பேட்டியொன்றில், எதற்காக கருங்காலி மாலை அணிந்து உள்ளீர்கள் என கேள்வி எழுப்ப, நல்லது நடக்கும் என பலரும் கூறினார்கள் அதனால் அணிந்தேன் என சிவகார்த்திகேயன் கூறினார்.


ஆனால் கருங்காலி மாலை அணிந்தால் சிவகார்த்திகேயனுக்கு நல்லதே நடக்கவில்லை அந்த மாலை அணியாமல் இருந்தப்ப கூட நல்ல பெயரும் இருந்தது படமும் ஹிட் அடித்தது ஆனால் அந்த மாலை அணிந்த பிறகு இமான் விவகாரத்தில் அவர் பெயர் அடிபட்டு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய கெட்ட பெயர் உருவானது. 

அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு தற்பொழுது வெளியாகும் அயலான் திரைப்படம் ஓடுமா ஓடாதா என்ற  குழப்பமும் இருந்து வருகிறது அதனால்தான் கருங்காலி மாலையை சிவகார்த்திகேயன் கழட்டிவிட்டார்.

அதேபோல் லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலை அணிந்து வந்தார் லியோ திரைப்படம் வெளிய ஆவதற்கு முன்பு லோகேஷ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருந்தார். ஆனால் லியோ திரைப்படத்திற்கு பிறகு ஒரு இயக்குனர் அவ்வளவு தான் என்பது போல் அவரை வச்சு செய்துவிட்டனர்.

மேலும் கருங்காலி மாலை கருங்காலித்தனமாக வேலை செய்து விட்டது இவர்கள் இருவருக்கும் என அந்தணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த லிஸ்டில் நடிகர் தனுஷ் அவர்களும் கருங்காலி மாலை அணிந்த பின் அவருக்கு என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும்.   

அதேவேளை, கருங்காலி மாலையை அணிந்த யாரும் இதுவரையில் தனக்கு இதனால் தான் நல்லது நடந்தது என சொல்லி இருந்ததாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement