• Dec 26 2024

புதிய தொழில்நுட்பத்தில் தயாராகும் விடுதலை 2 படம்! வெற்றிமாறனின் அடுத்த அவதாரம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக காணப்படுவது அடுத்த வருடம் வெளியாகவுள்ள வெற்றிமாறனின் விடுதலை 2 படம் தான். இதன் முதல் பக்கம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அந்தவகையில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்ட டீஏஜிங் தொழில்நுட்பத்தையே அதில் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.


வெற்றிமாறன் தனது படங்களில் கம்யூட்டர் கிராபிக்ஸ், விஷுவல் எபெக்ட்ஸ் போன்றவற்றை கண்டிப்பாக தேவைப்படும் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்துவதை பின்பற்றி வந்தார்.

இந்த சூழ்நிலையில் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோரின் இளம் தோற்றத்தை இந்த டீஏஜிங் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தை அவர் உபயோகப்படுத்தவுள்ளாராம். 

படத்தில் விஜய் சேதுபதி - மஞ்சுவாரியர் ஆகியோர் கணவன் மனைவியாக தோன்ற இருப்பதாகவும், இவர்கள் தொடர்பான காட்சிகள் 1960களின் பின்னணியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, கெட்டப் மாற்றம், மேக்கப் என்ற மெனக்கெடாமல் இந்த டீஏஜிங் மூலம் நடிகர்களை இளமையான தோற்றத்தில் காட்டும் விதமாக இனி அடுத்தடுத்து சினிமாக்கள் அணிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement

Advertisement