• Jun 12 2026

செஃப் வெங்கடேஷ் பட் போட்ட ஒரே ஒரு கமெண்ட்.. விஜய் டிவி ரசிகருக்கு நெத்தியடி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக காணப்படுவது தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த மாதம் கோலாகலமாக ஆரம்பமானது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் கடந்த நான்கு சீசன் வரை வெங்கடேஷ் பட் நடுவராக தொகுத்து வழங்கி வந்தார். எனினும் இதன் ஐந்தாவது சீசனில் பங்கு கொள்ளாமல் விலகி இருந்தார். இதை தொடர்ந்து இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொருவரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தார்கள்.

இதைத்தொடர்ந்து செஃப் தாமுக்கு ஜோடியாக மதம்பட்டி ரங்கராஜ் இந்த சீசனை தொகுத்து வழங்க, சின்னத்திரை நடிகைகள் youtube பிரபலம் என்று புதுப்புது போட்டியாளர்கள், கோமாளிகளுடன் இந்த சீசன் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.


அதேபோல சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு  என்ற சமையல் நிகழ்ச்சிக்கு வெங்கடேஷ் பட் சிங்கிள் நடுவராக களம் இறங்கினார். அந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கோமாளி போலவே காணப்பட்டது.

இந்த நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி பற்றி ரசிகர் ஒருவர்,  'இந்த நிகழ்ச்சி பிளாப்பாகும்.. விஜய் டிவி போல காமெடி பண்ண முடியாது' என பதிவிட்டுள்ளார். அதற்கு 'கொஞ்சம் பொறுத்து இருந்து பாரு கண்ணா'  என கமெண்ட் பண்ணி உள்ளார் செஃப் வெங்கடேஷ் பட்.



Advertisement

Advertisement