• Jun 14 2026

பேட்டியெடுக்க ஓடிவந்த செய்தியாளர்கள்.. திடீரென கார் டிரைவரை எச்சரித்த ரஜினி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபுதாபிக்கு சென்று வந்தார். தற்போது இமய மலைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்து லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு வருடமும் இமய மலைக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ரஜினிகாந்த் தற்போது மீண்டும் இமயமலைக்கு சென்றுள்ளார். இதை தொடர்ந்து ரிஷிகேஷ், கேதார்நாத்  உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்கும் செல்ல உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காரில் சென்ற போது அவரிடம் செய்தியாளர்கள் ஓடிவந்து சந்தித்து பேட்டி எடுத்துள்ளார்கள். இதன் போது அவர்களுக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்க முற்படுகையில், அவரது கார் டிரைவர் சட்டென காரை எடுத்துள்ளதால் ஒரு நிமிடம் டென்ஷன் ஆகி, உடனே டிரைவரை எச்சரித்துள்ளாராம்.


அதாவது, ரஜினிகாந்த் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரை சந்திக்க செய்தியாளர்கள் ஓடி வந்து உள்ளார்கள். இதன் போது அவர்கள் ரஜினியுடன் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போது ரஜினியின் கார் டிரைவர் வண்டியை நகர்த்த எடுத்த நிலையில், கடுப்பான ரஜினி 'கொஞ்சம் இருங்க..இருங்க..' என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை அடுத்து கார் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு ரஜினிகாந்த் செய்தியாளர்களை எப்போதுமே அலட்சியப்படுத்த மாட்டார் என குறித்த வீடியோவை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement