• Dec 26 2024

சேரனுக்கு திருநங்கைகள் மீது ஒருவித அடிக்சன் இருக்கு..! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகளில் நடக்கும் சர்ச்சைகளை தொடர்ந்து பாடகி சுசித்ராவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப்பின் நிகழ்வை சேரனுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி உள்ளது.

அதன்படி அவர் பேசும் போது, 'தவறான தொடுதல் பற்றி நாம் இங்கு பேசிய ஆக வேண்டும். சேரன் பங்கு கொண்ட பிக் பாஸ் சீசனில், மீரா மிதுன் ஒரு டாஸ்க்கில் சேரன் தொடுவது தவறாக இருக்கிறது என்று சொன்னார். இந்த விஷயத்தில் மீரா மிதுனை தான் எல்லோரும் தவறு சொன்னார்கள். சேரனை சரி என்று சொன்னார்கள். ஆனால் அதில் மீரா மிதுனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படவில்லை. சேரனை தவறு என்று கமலாகிய நீங்கள், குறிப்பிட்டீர்கள். அதை அங்கேயே அப்படியே விட்டு விட்டு சென்று விட்டார்கள். 


அங்கு இருந்த ஒரு பறந்த மனப்பான்மை பிரதீப் விவகாரத்தில்  ஏன் இல்லை. உண்மையில் மீராமிதுன் வெளியில் இருக்கும் போது, அவன் என்னை தொட்டான், இவன் என்னை தொட்டான் என்று என்றைக்குமே சொன்னது கிடையாது. தான் தான் பலரையும் தொடுவேன் என்று சொல்லியிருக்கிறார். 

உண்மையில் சேரன் விகாரத்தில் அந்த டாஸ்க்கில் அவர் நடந்து கொண்ட நடைமுறையானது ஜூம் செய்து பார்க்கப்பட்டது அப்போது அவர் தவறாக நடந்து கொண்டது தெளிவாக தெரிந்தது. ஆனால், அந்த விஷயத்தில் சேரன் அழுது, பிழிந்து.. ஐயோ என்னுடைய கை தானாக சென்று விட்டது என்று சொல்லி.. என்னை போய் இப்படி சொல்கிறீர்களே என்று புலம்பினார். மேலும் இத்தனை வருடம் சினிமா வாழ்க்கையில் யாருமே என் மீது இப்படியான ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை என்று கூறினார். 

ஆனால், உண்மை என்னவென்றால் சேரனை பற்றியும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 120 பெண்கள் அவர் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்கள். நிறைய நடிகர்கள் அவர் மீது இந்த மாதிரியான புகார்களை முன் வைத்து இருக்கிறார்கள் இவ்வளவு ஏன் திருநங்கைகள் கூட சேரன் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்கள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சேரனுக்கு திருநங்கைகள் மீது ஒரு விதமான அடிக்சன் இருக்கிறது.' என்று பேசினார். 

Advertisement

Advertisement