• Oct 26 2024

மிக்சர் சாப்பிடும் காட்சியுடன் பங்கமான டைட்டில் வின்னர்! ஓட்டு கேட்டு மேலும் அசிங்கப்படுத்திய விஜய் டி.வி! ட்ரோலாகும் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீடு தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளரான சரவண விக்ரமை வைத்து செம்மையாக மீம்ஸ், ட்ரோல்கள் செய்து வருகின்றனர். தற்போது குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் வீட்டில் மிக்சர் போட்டியாளர்களாக வினுஷா, அக்‌ஷயா, பிராவோ குறித்து விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வரிசையில் சரவண விக்ரம் இணைந்திருக்கிறார். 

ஆரம்பம் முதல் தற்போது வரையில் அவரது உண்மை முகம் தெரியவே இல்லை. கேப்டனாக அவர் இருந்த வாரம் கூட அவராக எந்த முடிவையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அவர் தொடர்பில் பல விமர்சனங்கள் குவிக்கப்பட்டது.


பிக் பாஸ் வீட்டில் ஒரு கட்டத்தில் தான் டைட்டில் வின் பண்ண வாய்ப்பு இருப்பதாக அவரே கூறிக்கொண்டார். இதை தொடர்ந்து அவர் தொடர்பான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில், பொதுவாக பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை நெட்டிசன்கள் தான் ட்ரோல் செய்வார்கள். ஆனால் தற்போது சரவண விக்ரமை விஜய் டிவியே ட்ரோல் செய்யும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

இதில் அவ்வப்போது அவர் பேச்சு மற்றும் செயல்களை பிக்பாஸ் பெரிதுபடுத்தி காட்டிய நிலையில், தற்போது அவர் மிக்சர் சாப்பிடும் காட்சி வரும்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர வேண்டும் என்றால் வாக்களியுங்கள் என்று டிஸ்ப்ளேவில் வருகிறது.

அதேவேளை, முதல் சீசனில் எப்படி ரித்திகா அமைதியாக இருந்து டைட்டில் வின் பண்ணினாரோ அதே மாதிரி இந்த சீசனில் நிச்சயம் கப்பு எங்க சரவண விக்ரமிற்குத்தான் என இன்னொரு புறம் அவரது ரசிகர்கள் கமென்ட் இட்டுக் கொண்டிருக்கின்றனர். 


Advertisement