• May 23 2026

மாணவர்களின் பாதுகாப்புக்காக விஜய் எடுத்த அதிரடி முடிவு.! யாரும் எதிர்பார்க்காத மாற்றம்..

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் சமீபத்தில் பொறுப்பேற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து,மாநிலம் முழுவதும் கோவில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக, மக்கள் நலன் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.


மேலும், ஆரம்ப கட்டமாக டாஸ்மாக் கடைகள் தொடர்பான முழுமையான கணக்கெடுப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் சுமார் 717 டாஸ்மாக் கடைகள் அடையாளம் காணப்பட்டு மூடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் இடையே இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. சிலர் இதை வரவேற்று முதலமைச்சரின் செயலைப் பாராட்டி வருகின்றனர். 

Advertisement

Advertisement