• May 23 2026

அடக்கடவுளே.! சூர்யாவைக் காண ஓடோடி வந்த ரசிகருக்கு இறுதியில் கிடைத்தது இதுதானா?

shali / 1 week ago

Advertisement

Listen News!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள புதிய படம் ‘கருப்பு’ தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


சூர்யா மற்றும் த்ரிஷா இணைந்துள்ள இப்படத்தை Dream Warrior Pictures தயாரித்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். 

படம் மே 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஐதராபாத்தில் நடைபெற்ற பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சூர்யா , கார்த்தி மற்றும் இயக்குனர் RJ பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்போது, ஒரு உணர்ச்சிபூர்வமான தருணம் நிகழ்ந்தது. ரசிகர் ஒருவர் திடீரென மேடைக்கு ஓடி வந்து சூர்யாவின் காலில் விழுந்தார். பாதுகாவலர்கள் அவரை வெளியே அழைத்துச் செல்ல முயன்ற போதும், சூர்யா அவர்களை தடுத்து ரசிகரை அனுமதித்தார். பின்னர் அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement