• Dec 25 2024

அந்தகன் படத்தை புரமோஷன் செய்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்! இதோ வீடியோ

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறக்கடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு தமிழ்நாடு டிஆர்பி ரேட்டிங்கில் முதலாவது இடத்தை தக்க வைத்துள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் ஏனைய சீரியல்களைப் போல் அல்லாமல் மாறுபட்ட கதை அம்சத்துடன் இளம் நடிகர்களின் துடிதுடிப்பான  அசத்தல் நடிப்புடன் ஒளிபரப்பாகி வருகின்றது. இதன் காரணத்தினாலே இந்த சீரியலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் ரசிகர்களாக காணப்படுகின்றார்கள்.

இந்த சீரியலில் அடிக்கடி புதிய புதிய திருப்பங்கள் ஏற்படுவதோடு சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் ரோகிணி என்ற கேரக்டர் எப்போது வீட்டில் மாட்டுவார் என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றது. இதன் காரணத்தினாலே அதிகளவானோர் இந்த சீரியலை இடைவிடாது பார்த்து வருகின்றார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரங்கள் காணப்படுவதோடு அவர்களுக்கான கதையும் தனித்தனி பாதையிலேயே காணப்படுகிறது.


அந்த வகையில் இந்த சீரியலில் நடிக்கும் முக்கிய கேரக்டர் ஆன முத்துக்கு நண்பராக காணப்படுபவர்  தான் செல்வம். அதாவது செல்வம் கேரக்டரில் நடிப்பவர் தான் பழனியப்பா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.

இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக உள்ள அந்தகன் படம் பற்றி சின்ன புரமோஷன் ஒன்றை செய்துள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பிரபலமான நிலையில், அவர்கள் வெளியிடும் போட்டோக்கள் மட்டுமின்றி வீடியோக்களும் ரசிகர்களால் தவறாமல் பார்க்கப்பட்டு வருகின்றது. 

தற்போது பழனியப்பன் வெளியிட்ட அந்தகன் படம் பற்றிய வீடியோவும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டுள்ளதோடு அதற்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement