• Oct 26 2024

என்னைய ஃப்ரீயா விடல..!! மொத்த பழியையும் விஜய் மீது போட்ட யுவன்! பிரபலம் கூறிய அதிரடி தகவல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதுவரை இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன.

ஆரம்பத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் விஜய் குரலிலேயே வெளியாகி இருந்தது. அவை கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் ரசிகர்களை கவர்ந்தன.

மூன்றாவது சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. அதனை யுவன் சங்கர் ராஜா பாட, பாடலுக்கான வரிகளை இயக்குனரும் பாடல் ஆசிரியருமான கங்கை அமரன் எழுதியிருந்தார். ஸ்பார்க் என ஆரம்பிக்கும் குறித்த பாடல் தற்போது வரையில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

கோட் திரைப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். இதற்கு முதல் வெளியான கோட் போஸ்டர்கள் ரசிகர்களை ஏராளமாக கவர்ந்துள்ளன. இரண்டாவதாக வெளியான அப்பா விஜய் மற்றும் சினேகா ஆகியோரின் பாடலும் மெல்லிசையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் அண்மையில் உயிரிழந்த பவதாரணியின் குரல் பயன்படுத்தப்பட்டது பலரையும் நெகிழ்ச்சிக்குள் ஆக்கியிருந்தது.


இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ஸ்பார்க் பாடல் பற்றிய பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது யுவன் சங்கர் ராஜா கூறியதாக வலைப்பேச்சு அந்தணன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது விஜயின் மூன்றாவது சிங்கிள் பாடலுக்காக தான் ஐந்து மியூசிக் போட்டதாகவும் அதில் ஒன்றைய் விஜய் தெரிவு செய்து இதைத்தான் போடுமாறு கூறியுள்ளார் என்றும், இதன் காரணத்தினாலே யுவன் சங்கர் ராஜா அந்த பாட்டை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார். இதுக்கு முன்னாடி ஸ்டார் படத்துல நல்லா தான் பாட்டு போட்டு இருந்தேன் இவங்க என்ன ஃப்ரீயா விடல அதனாலதான் பாடல்கள் இப்படி ஆயிடுச்சு என்று யுவன் குழம்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement