பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்களிடையே ட்ரோலாகியும் வருகிறது.
அட்லி தயாரிப்பில் வருண் தவான் நடிப்பில் உருவான பேபி ஜான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் வருண் தவானின் மனைவியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று ரிலீசான நிலையில் நல்ல விமர்சனம் பெற்று வருகிறது. அத்தோடு கீர்த்தியின் கிறிஸ்துமஸ் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் அன்று பேபி ஜான் படம் ரிலீஸானதால் படக்குழுவினருடன் பண்டிகையை கொண்டாடினார் கீர்த்தி சுரேஷ். "பேபி மீரா, பேபி ஜானின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்" என தான் வருண் தவானுடன் சேர்ந்து பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்கள் லைக்குகளை அள்ளிவருகிறது. இருப்பினும் நெட்டிசன்கள் "தல கிறிஸ்துமஸ் வருண் தவான் கூடயா கொண்டாடுனீங்க" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Baby Meera & Baby John wishes you a merry Christ-MASS 🎄❤️#BabyJohnPromotions #MerryChristmas pic.twitter.com/OvFUQKwWky
Listen News!