• Dec 27 2024

விஜய் SIR_ ரே சொல்லிட்டாரு..!! அலங்கு படத்திற்கு தளபதி பண்ணிய சப்போர்ட் என்ன தெரியுமா?

Aathira / 13 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரான விஜய் சமீப காலமாகவே ஏனைய திரைப் படங்களின் ப்ரோமோஷனுக்கு உதவி செய்து வருகின்றார். அதன்படி மார்க் ஆண்டனி, ஹிட் லிஸ்ட் ஆகிய பட குழுவினர்கள் விஜயை நேரிலேயே சந்தித்து அந்த படத்தை ப்ரோமோஷன் செய்தார்கள். அதன்பின்பு அந்தகன் படத்திலிருந்து ஒரு பாடலையும் விஜய் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், அலங்கு பட குழுவினரையும் விஜய் தனது வீட்டிற்கே அழைத்து அவர்களை பாராட்டி உள்ளார். அலங்கு படத்தை பிரபல அரசியல்வாதியான அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா தயாரித்துள்ளார்.

d_i_a

ஏற்கனவே அலங்கு படத்தின் ப்ரோமோஷனுக்காக ரஜினிகாந்தை படக்குழுவினர் சந்தித்தனர். அதன் பிறகு தளபதியையும் சந்தித்து படத்தை ப்ரோமோஷன் செய்துள்ளார்கள். இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதன் போது அலங்கு படத்தின் தயாரிப்பாளர் சங்கமித்ரா கூறுகையில்,  இந்த படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு விஜய் பாராட்டினார். இந்த படத்தின் டிரைலரை பார்த்த போது அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. ரொம்ப நல்லா இருக்கு என்றும் சொன்னார்.

இந்த படத்தின் டீசரை விஜய்  பார்ப்பதற்கு முன்பு நாங்கள் கோயம்புத்தூரில் பிரீமியம் ஷோ ஒன்று பண்ணியிருந்தோம். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் வந்துச்சு.. அதை அவரே சொன்னாரு.. மேலும் நானும் இதனை பார்த்தேன்.. ஆல்ரெடி நல்ல டாக்ஸ் இருக்குது.. அதனால இந்த படம் கண்டிப்பா நல்லா வரும் என்று எங்களை என்கரேஜ் பண்ணி சப்போர்ட் பண்ணியதாகவும் விஜய் பற்றி சங்கமித்ரா தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement