தமிழ் பிக்பாஸ் சீசன் 8 இறுதிவாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பணப்பெட்டி டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. டாப் 6 ஒவ்வொரு போட்டியாளர்களும் தீவிரமாக விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய நாள் அடுத்த டாஸ்க் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே முத்து, ரயான், விஷால் ஆகியோர் பண பெட்டியை எடுத்தநிலையில் தற்போது அடுத்த பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு இரண்டு லட்சம். நேரம் 25 செக்கென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 45 மீட்டர் தூரத்தில் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை பணப்பெட்டியை எடுப்பதற்கு ஜேக்குலின் மற்றும் பவித்ரா முன்வருகிறார்கள்.
இரண்டு பேரும் வாதிட்டு ஒருவர் தெரிவாகி சொல்ல வேண்டிய நிலையில் ஜாக்குலின் "நான் போகிறேன் பவி" என்று சொல்கிறார். அதற்கு பவித்ரா "இல்லை நான் போறேன் ஒன்னும் செய்யாமல் வெளிய போறதுக்கு இதுல தோற்றாலும் பரவாயில்லை வெளிய போகலாம்னு நினைக்கிறேன்" என்று சொல்கிறார். பின்னர் ஜாக்குலின் "சரி நீயே போ என்று விட்டுக்கொடுக்கிறார்.
மணி அடித்த உடனே ஓடிய பவித்ரா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வருகிறார். ஜாக்குலின் உட்பட போட்டியாளர்கள் அவளாக பார்த்து கொன்டு இருக்கிறார்கள் கதவு மூடப்படுகிறது. பவித்ரா அதற்குள் உள்ளே வந்து விடுகிறார்.
Listen News!