விஜய் சேதுபதி துணை நடிகராக இருந்து கதாநாயகனாக, வில்லனாக தற்போது பிக்பாஸ் நடுவராகவும் திகழ்ந்து வருவதோடு பாடல் ஆசிரியர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். இன்றைய தினம் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் பற்றிய பல தகவல்கள் வெளியாகக் கொண்டுள்ளன.
சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்தான் விஜய் சேதுபதி. அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பீட்சா என்ற படத்தில் நடித்தார். இந்த படம் அவரது கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
d_i_a
இதைத்தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், தர்மதுரை, நானும் ரவுடிதான் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார். மேலும் விக்ரம் வேதா, பேட்ட, விக்ரம் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து வெற்றி கண்டிருந்தார்.
தமிழில் மட்டுமில்லாமல் தற்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துவரும் விஜய் சேதுபதி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ன் தொகுப்பாளராகவும் காணப்படுகின்றார். இவருடைய ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படம் இந்திய அளவில் மட்டும் இல்லாமல் சீனாவிலும் வெற்றி கண்டது.
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட்டுகள், பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டு உள்ளன.
அதன்படி மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கம் ACE என தலைப்பிடப்பட்ட படத்தின் போஸ்டரும் வெளியாகி உள்ளது.
Listen News!