• Dec 26 2024

தளபதி -னாலே சும்மா அதிருதுல்ல.! ஷூட்டிங் ஸ்பாட்டை முடக்கிய விஜய்யின் தீவிர ரசிகர்கள்! சற்றுமுன் தரமான சம்பவம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றி நடை போட்டு வந்த நடிகர் விஜய், தற்போது அரசியலில் களம் இறங்கி இருப்பது யாவரும் அறிந்த ஒன்று.

தனது அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய், சினிமா துறையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.


அதன்படி நடிகர் விஜயின் 68 ஆவது படமான GOAT  திரைப்படத்துடன் சினிமா துறையில் இருந்து  விலகி, அரசியலில் முழு நேரமாக ஈடுபடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், தற்போது பாண்டிச்சேரியில் நடக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை பார்ப்பதற்கு என பெருந்திரளான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.


இதைத்தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு தரிசனம் வழங்கிய விஜய், அங்கிருந்த பஸ் ஒன்றின் மேல் ஏறி தனது ரசிகர்களுக்கு காட்சி வழங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி ரசிகர்கள் வீசிய மாலையை எடுத்துப் போட்டுக் கொண்டு, அதனை மீண்டும் தனது ரசிகர்களுக்கே வீசி அவர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் நடிகர் விஜய்.

தற்போது பாண்டிச்சேரியில் விஜய்யின் ரசிகர்கள் அவருக்கு வழங்கி வரும்  ஆதரவையும், கோஷங்களையும் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.




Advertisement

Advertisement