• Dec 26 2024

’தளபதி 69’ படத்திற்கு பின் இரண்டு படங்கள்.. லோகேஷ் கனகராஜின் மாஸ் திட்டம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு படம் மட்டுமே அவர் நடிப்பார் என்றும் அதுதான் ’தளபதி 69’ என்றும் அதன் பின் அவர் முழு நேர அரசியலில் இறங்குவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில்  விஜய் மேலும் இரண்டு படத்தில் நடிப்பார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

 தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கியுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டை இலக்காக கொண்டு அவர் அரசியல் பணியை தொடங்க உள்ளார். எனவே ’கோட்’ படத்தை முடித்துவிட்டு அதன் பின் ’தளபதி 69’ படத்தை முடித்த பின்னர் முழு நேர அரசியலில் இறங்க இருப்பதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது திடீர் திருப்பமாக விஜய் நடித்த மேலும் இரண்டு படங்கள் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிக் கொண்டிருந்தபோதே தனது எல்.சி.யூ படங்களுக்காக விஜய் நடித்த சில பிரத்யேகமாக காட்சிகளை படம் எடுத்ததாக கூறப்படுகிறது.


இந்த காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடித்தது மட்டுமின்றி அதன் டப்பிங் பணியையும் விஜய் முடித்து கொடுத்துவிட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகளை லோகேஷ் தனது அடுத்தடுத்த படங்களான ‘விக்ரம் 2’ மற்றும் ‘கைதி 2’ படங்களுக்கு பயன்படுத்தவுள்ளார். 

எனவே ’தளபதி 69’ படத்திற்குப் பிறகு விஜய் சிறப்பு தோற்றங்களில் நடித்த ‘விக்ரம் 2’ மற்றும் ’கைதி 2’ ஆகிய படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement