• Dec 25 2024

நிர்வாகம் மீது மலை போல் குவிந்த புகார்கள்! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டெலிவிஷன் வெற்றிகரமாக நடத்திவரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 8. கடந்த 7 சீசன்களை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க இந்த சீசனில் அவர் தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இருந்தனர். பின்னர் 4 பேர் வெளியே சென்ற நிலையில் இன்னும் 6 போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர். 


நேற்று பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் பாடசாலை நிர்வாகமாகவும், மாணவர்களாகவும் போட்டியாளர்கள் மாறி தங்களது பங்களிப்பை வழங்கி இருந்தனர். இதனிடையே இன்றைய நாள் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாடசாலை நிர்வாகம் தொடர்பில் உங்களது கருத்துக்களை சொல்லுமாறு கூறப்பட்டது. 

d_i_a


இந்த பாடசாலையில் சரிசமமாக பார்ப்பது இல்லை, பணக்காரவர்களை ஒரு மாதிரியும் ஏழைகளை ஒரு மாதிரியும் பார்க்கிறார்கள். இந்த பாடசாலைக்கு ஒரு வைஸ் பின்சிபல் தேவையா என்று தோணுது, அதேபோல அதிபர் தேவையா என்றும் தோணுது. அதிபர் எல்லா மாணவர்கள் கிட்டையும் ருடா பேசுறாங்க. அதிபரே கெட்ட வார்த்தைகள் பேசுவது நல்லா இல்ல என்று பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.  

Advertisement

Advertisement