• Dec 28 2024

கோழிப்பண்ணை செல்லத்துரை படத்திற்கு நடந்த சதி..? குமுறிய இயக்குனர்!

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனரான சீனு ராமசாமி இயக்கத்தில் ஜோகி பாபு, ஏகன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கோழிப்பண்ணை செல்லத்துரை. 

இந்த படத்தில் சத்யா, பிரிகிடா போன்ற நடிகைகள் நடித்துள்ளார்கள். இதற்கு ரகுந்தன் இசையமைப்பு செய்துள்ளதோடு அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் சீனு ராமசாமி  இயக்கத்தில் வெளியான படம் என்பதாலும் சமீப காலமாகவே தனித்துவமான கதைக்களங்களை தேர்வு செய்து யோகி பாபு நடித்து வருவதாலும் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.

அதன்படி புதுமுக நடிகர்களுடன் வெளியான கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படம் கடந்த 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஷன் சினிமா ஹவுஸ் சார்பாக டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் இணைந்து  இந்த படத்தை தயாரித்து உள்ளனர்.


கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெளியானது. இதன் காரணத்தினால் இந்த படத்திற்கு சுத்தமாக கூட்டம் வரவில்லை என கூறப்படுகின்றது. ஆனாலும் இந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் தெரிவாகி இருந்தது.

இந்த நிலையில், கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தை பற்றி பேசிய இயக்குனர் சீனு ராமசாமி, என் படம் பிடிக்கவில்லை என்றால் இன்பாக்ஸில்  வந்து சொல்லுங்கள் அல்லது திட்டுங்கள். படம் பிடித்திருந்தால் ஸ்டேட்டஸ் வையுங்கள்.

எங்களுடைய படம் செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்த போது வேறு எந்த படமும் ரிலீஸ்  ஆகும் என அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதே நாளில் ஏழு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன என தனது வேதனையை தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement