• Dec 25 2024

ஈஸ்வரிக்கு தொடர்ச்சியாக விழும் அடி.. பாக்கியா எடுத்த முடிவு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எழிலும்  இனியாவும் ஒரு வழியாக டான்ஸ் கம்படிசனில் கலந்து கொள்வதற்காக பாக்கியாவிடமும் ஈஸ்வரியிடமும் சம்மதம் வாங்கிக் கொள்கின்றார்கள். அதன்பின்பு ஈஸ்வரி   இனியாவை அழைத்துக் கொண்டு காலேஜுக்கு செல்ல தயாராகின்றார்.

அதன்படி இனியாவை அழைத்துக் கொண்டு வாசலில் வந்து நிற்கும் போது அயலில் உள்ளவர்கள் ஈஸ்வரியை பார்த்து கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த நேரத்தில் கமலாவும் வந்து ராமமூர்த்தியின் ஆத்மா சாந்தி அடையுமா? வீட்டுக்குள்ள இருந்தா என்ன? பொட்டு வச்சுக்கொண்டு ஊர் சுத்த போகிறீர்களா என்று ஈஸ்வரியை கண்ட மாதிரி திட்டுகின்றார்.

இதனால் ஈஸ்வரி அழுது கொண்டே உள்ளே வந்து நடந்தவற்றை பாக்யாவிடம் சொல்ல வேண்டாம் என்று இனியாவிடம் சொல்லுகின்றார். மேலும் எழிலிடம் இனியாவை காலேஜில் விட்டு விடுமாறு சொல்லி ரூமுக்கு செல்லுகின்றார். என்ன நடந்தது என்று கேட்க, தலை சுற்றுவது போல் உள்ளது என்று சமாளிக்கிறார்.


இதைத்தொடர்ந்து ரெஸ்டாரண்டில் செஃப் சமைப்பதை பார்த்து எல்லாரும் நின்று கொண்டிருக்க, பாக்கியா வந்து வெளியில் இருக்கிற வேலைகளை பார்க்குமாறு அனுப்பி வைக்கின்றார். மேலும் 500 பேருக்கு சமைப்பதற்கான லிஸ்ட்டை செஃப் கொடுக்கும் போது,  அதில் உள்ள திருத்தங்களை செய்துவிட்டு செல்வியிடம் அந்த சாமான்களை வாங்கி வருமாறு கொடுத்து அனுப்புகின்றார். தான் வாங்குவதாக செஃப் சொல்லவும் பரவாயில்லை என பாக்கியா மறுக்கிறார்.

இறுதியாக செழியன் வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரி இனிமேல் இனியாவை காலேஜுக்கு கொண்டு போய் விட்டு கூட்டி வருமாறு சொல்ல, எனக்கு வேறு வேலை இல்லையா? அவள் பஸ்ஸில் போன மாதிரியே போய் இருக்கலாம் நீங்களும் தாத்தாவும் தானே இப்படி பழகினீர்கள் என்று ஈஸ்வரிக்கு எதிராக பேசுகின்றார். இதனால் ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார்.

Advertisement

Advertisement