• Dec 26 2024

மீனாவை சிக்க வைக்க ரோகிணி செய்யும் சூழ்ச்சி.. மனோஜை விரட்டியடித்த முத்து

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், லெட்டர் போட்டு  மிரட்டியவர் யாரென்று தான் கண்டுபிடித்ததாக முத்து சொல்லிக்கொண்டு இருக்க, உன்னால அடி வாங்கினவன் தான் எனக்கு பிரச்சனை தாரான் என்று மனோஜ் சொல்லுகின்றார். இதுதான் சான்ஸ் என ரோகிணியும் உங்கட பிரச்சனையில் எங்களையும் இழுத்து விட்டீங்க அப்படி என்று மொத்த பழியையும் தூக்கி முத்து மேல போடுகின்றார்.

ஆனாலும் முத்து அவன் எப்படியும் மாட்டுவான் தானே. நான் எல்லா பக்கமும் சொல்லி வைத்திருக்கின்றேன் அப்போ தெரியும் என்று சொல்ல, ரோகிணி அதிர்ச்சி அடைகின்றார். 

இதை தொடர்ந்து, ஷாப்பிங் போய்விட்டு ரவியும் ஸ்ருதியும் வந்து கொண்டு இருக்கும் வழியில், நீத்து அவர்களை வழிமறித்து நிப்பாட்டுகின்றார். தான் அவசரமாக மீட்டிங் ஒன்றுக்கு செல்ல வேண்டும் கார் ரிப்பேர் ஆயிற்று என்று பைக்கில் உட்கார்ந்து போகின்றார்.

அந்த நேரத்தில் டிராபிக் இடம் வசமாக மாட்டிக் கொள்கின்றார்கள். இதனால் ஸ்ருதி ஃபைன் கட்டுகின்றார். அதன் பின்பு நீத்து  போலீஸ்காரருடைய வண்டிலையே எரிச்செல்கின்றார்.


இதை அடுத்து நைட் முத்து ரவி, மனோஜிடம் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்க, ரவி தான் அன்னியுடன் சமைக்கப் போவதாக சொல்கின்றார். ஆனால் மனோஜ் தனக்கு வேலை இருக்கின்றது அதனால் செய்கின்ற சாப்பாட்டை கடைக்கு கொடுத்து விடுமாறு சொல்லுகின்றார். இதனால் முத்து அவரை விரட்டி விரட்டி அடிக்கின்றார்.

இன்னொரு பக்கம் மீனா என்ன என்ன சாப்பாடு செய்வதென்று லிஸ்ட் போட்டு கொண்டு இருக்க, ஸ்ருதியும் அவருடன் வந்து  கதைத்து பேசிக் கொண்டிருக்கின்றார். அந்த நேரத்தில் அங்கு வந்த ரோகிணி அவர்கள் இருவரையும் பார்த்து நீங்கள் தானே கதைப்பதில்லை என்று சொல்ல, அதன் பின்பு மீனாவும் ஸ்ருதியும்  சண்டை போடுவது போல் சண்டை போட்டுவிட்டு பிரிந்து செல்கின்றார்கள். 

இதனால் ரோகிணி கொலு வைக்கிற டைமில் முத்து ஃபோனில் இருந்து வீடியோவை எடுக்க பிளான் போடுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement