• Dec 26 2024

'கண்ணே கலைமானே' சீரியலில் தொடரும் சர்ச்சை! ஹீரோவை தொடர்ந்து டைரக்டரும் திடீரென விலகல்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிரபல சீரியலாக 'கண்ணே கலைமானே' சீரியல் ஒளிபரப்பப்படுகிறது. எனினும் கடந்த நாட்களுக்கு முன் நாயகன் நந்தா மாஸ்டர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது சீரியலை இயக்கி வந்த இயக்குனர் ராஜா தனுஷ் நீக்கப்பட்டுள்ளார். 

'கண்ணே கலைமானே' சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வந்த நிலையில், ஹீரோவாக நடித்து வந்த நந்தா திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 


இதனிடையே தற்போது இந்த சீரியலை இயக்கி வந்த இயக்குனர் ராஜா தனுஷூம் சீரியலில் இருந்து விலகியுள்ளார். ஹீரோ விலகிய சில வாரங்களிலேயே சீரியலின் இயக்குனரும் கேமராமேனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விலகியது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


எனவே இதற்கு ஒரு தீர்வு கிடைக்காவிட்டால் ஷூட்டிங்கை மொத்தமாக நிறுத்துவோம் என்று கேமராமேன் அசோஷியேன் செக்ரட்டரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement