• Dec 25 2024

கௌதம் சுட்டது கதிரையா? குணசேகரனையா? ஜீவானந்தம் சேவ்..! அதிரடித் திருப்பத்துடன் 'எதிர்நீச்சல்' சீரியல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் வெளியான மற்றுமொரு ப்ரோமோவில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

மேடையில் நின்று அப்பத்தா பேசிக் கொண்டு இருக்க துப்பாக்கி சத்தம் கேட்க நபரொருவர் கீழே விழுகிறார். அதைப் பார்த்து மொத்த குடும்பத்தினரும் பதறிப் போகின்றனர்.  இப்படியாக ஒரு ப்ரோமோ முடிவு அடைந்து இருக்கிறது. அதை தொடர்ந்து ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. 

அதில் உண்மை தெரிந்த கௌதம் கதிரையும் குணசேகரனையும் கொள்ளாமல் விடமாட்டன் என சொல்லிட்டு போயிருக்கிறான் விஷயம் தெரியாம எதுவும் பண்ணிறாதடா கௌதம் என்று ஜீவானந்தம் பேசிக் கொண்டிருக்கும் போதே துப்பாக்கி சத்தம் கேட்க, ஒரு நபர் கீழே விழுகிறார்.


இதை தொடர்ந்து எல்லோரும் பதறிப் போய் பார்க்க, ஜீவானந்தம்  நல்லபடியாக நிற்கிறார். அதே நேரத்தில் மேடையில் குணசேகரன் சால்வை போடுவது போல காட்டப்பட்டது. இதையடுத்து, எல்லோருடைய கண்களும் மேடையில் கீழே தான் பார்க்கப்படுகிறது.

அதுபோல ஜான்சி ராணியும் தனக்கு முன்பு இருந்த ஆளை தான் பார்க்கிறார். அந்த இடத்தில் கதிர் தான் இருந்திருந்தார். அதனால் கௌதம் சுட்டது கதிராகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் அப்பத்தாவுக்கும் ஜீவானந்தரத்திற்கும் எதுவும் ஆகவில்லை என்பதால் சுடப்பட்டது கதிர் அல்லது குணசேகரன் ஆக கூட இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement