• Dec 25 2024

இந்த 6 பேரும் கன்ஃபர்ம்.. ‘குக் வித் கோமாளி’ புதிய புரமோ ..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இது குறித்த புரமோ வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். அந்த புரமோ வீடியோவில் நடுவர்களாக தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகிய இருவரும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 

மேலும் இந்த நிகழ்ச்சியின் குக்குகள் மற்றும் கோமாளிகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த நிகழ்ச்சியின் இன்னொரு புரமோ வீடியோ வெளியாகி உள்ளது. 

இந்த புரமோ வீடியோ மூலம் இந்த நிகழ்ச்சியின் ஆங்கர்களாக ரக்சன் மற்றும் மணிமேகலை ஆகிய இருவரும் உறுதி செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் கோமாளிகளாக குரேஷி, சுனிதா ஆகியோர்களும் அவர்களுடன் புகழ் மற்றும் ராமர் ஆகியவர்களும்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

4 கோமாளிகள் மற்றும் 2 ஆங்கர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே இரண்டு நடுவர்களும் உறுதி செய்யப்பட்டு விட்டதால், இனி அடுத்ததாக இந்த நிகழ்ச்சியின் குக்குகள் யார் யாராக இருக்கும் என்பது அடுத்த புரமோ வீடியோவில் இருந்து தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி வரும் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





Advertisement

Advertisement