• Apr 24 2026

பிக் பாஸ் வீட்டிலிருந்து கண்ணீருடன் விடைபெற்ற கூல் சுரேஷ்! பேரதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது செம சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொரு நாளும் பார்ப்பதற்கு சுவாரஷ்யமான பல போட்டிகள் வைக்கப்படுவதனால் போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள். 

எனினும், வாரத்தின் இறுதியில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை நினைத்தால் சற்று கவலையாக தான் இருக்கும்.

அதன்படி, இறுதியாக பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற மிட் வீக் எவிக்சனில் அனன்யா வெளியேறி இருந்தார்.


இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து கூல் சுரேஷ் வெளியேறியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போக வேண்டும் என்ற எண்ணத்தில் சுவர் ஏறிக் குதித்தார். எனினும் பிக் பாஸ் தலைவர் அவருக்கு ஆறுதல் சொல்லி வைத்திருந்தார்.

இவ்வாறான நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனாலும் அவருக்கு வெளியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் தமது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement