• Dec 26 2024

இது மாயாவின் உலக மகா நடிப்பு... பிக் பாஸ் வீட்டுக்குள்ள இப்படி செய்வாங்க என்று தெரியாது... வெளிப்படையாக கூறிய கூல் சுரேஷ்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாக கொண்டிருக்கும் பிக் பாஸ் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் கூல் சுரேஷ். தற்போது அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் பேட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி பிக் பாஸ் தொடர்பான விடயங்களை கூறி வருகிறார்.


பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு வெற்றியை கொடுக்கா விட்டாலும் அவர் இயல்பான பேச்சு ,குழந்தை மனசு அதனாலேயே 76  நாட்கள் பிக் பாஸ் வீட்டில் பயணித்தார் . பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்த பின்னர் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் எல்லா போட்டியாளர்களையும் பற்றி கூறியிருக்கிறார். 'அங்க யாரும் உண்மை இல்லையென்றும் ஒரு சிலர் மட்டுமே உண்மையாய் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் .


அவர் முக்கியமாக கூறியது ,மாயாவும் அர்ச்சனாவும் எதிரிகளாக இருந்திட்டு அர்ச்சனாவின் அம்மா காலில் மாயா விழுந்தது .ஒரு பெரிய மகா நடிப்பு என்று கூல் சுரேஷ் வெளிப்படையாக கூறியுள்ளார் .மற்றும் அங்க இருக்கும் ஒரு சிலர் உள்ள ஒண்டு வச்சிட்டு வெளிய ஒண்டு கதைப்பாங்க என்றும் கூறியுள்ளார் .


எல்லாரும் ரெடியா தான் வந்து இருக்காங்க ,நான் 3 ட்ரெஸ் ஓட தான் போனேன் .ஷூட்டிங் எண்டு நினைச்சி போனன் அவங்களே உடுப்பு எல்லாம் தருவாங்க என்டு அது தான் பெரிய ஜோக் என்றும் பேட்டியின் போது கூறியுள்ளார் .

Advertisement

Advertisement