• Dec 26 2024

தேடப்படும் குற்றவாளியாக கமல் பட நடிகை அறிவிப்பு.. உடனே கைது செய்ய உத்தரவு..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


கமல்ஹாசன் உடன்சலங்கை ஒலிஉள்பட ஒரு சில படங்களில் நடித்த நடிகை ஜெயப்ரதாவை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு உடனே அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயப்பிரதா என்பதும் ஹிந்திலும் இவர் பல படங்கள் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் உடன்சலங்கை ஒலி’ ’நினைத்தாலே இனிக்கும்’ ‘தசாவதாரம்விஜயகாந்த் உடன்ஏழை ஜாதிஉள்பட பல படங்களில் நடித்த ஜெயப்ரதா அரசியல்வாதியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது




 இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடந்த போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக ராம்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஜெயப்பிரதா நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது

ஆனால் ஜெயப்பிரதா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது மட்டும் இன்றி ஏழு முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது

இந்த நிலையில் ஜெயப்பிரதா திடீரென தலைமறைவாகிவிட்டதாக காவல்துறையினர் கூறியுள்ள நிலையில் ஆத்திரமடைந்த நீதிபதி தேடப்படும் குற்றவாளியாக நடிகை ஜெயப்பிரதாவை அறிவித்தார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement