• Dec 26 2024

நான் ட்ரங்க் அண்ட் டிரைவ் பண்ணல; ஆனா மைனர் ஆக்சிடென்ட் நடந்தது உண்மை! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மதுமிதா

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா,  கார் விபத்தை ஏற்படுத்திய நிலையில், அதில் காயமடைந்த பொலிஸ் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்றைய தினம் தகவல் வெளியானது.

அதாவது, தன்னுடைய காதலருடன் மது போதையில், அதுவும் ராங் ரூட்டில் வந்து, எதிரே வந்த போலீஸ்காரர் வண்டியில் மீது மோதியுள்ளார்கள்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்தில் அடிபட்ட போலீசை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளதோடு, மதுமிதாவையும் அவருடைய நண்பரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து  விசாரித்ததாகவும் கூறப்பட்டது.


இந்த நிலையில், இந்த விபத்து சம்பவம் தொடர்பில் நடிகை மதுமிதா விளக்கம் அளித்து உள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


என்ன நடந்தது என்று தெரியாமல், எல்லாரும் தவறாக பேசுகிறார்கள். நான் குடித்துவிட்டு வண்டி ஒட்டியதாகவும், போலீஸ் மீது காரை மோதி, அவர் சீரியஸாக இருப்பதாகவும் பேசுகின்றனர். ஆனால், அது உண்மையில்ல.

எனக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. விபத்து நடந்தது உண்மை தான். ஆனால் அந்த போலிஸுக்கு எதுவும் ஆகவில்லை. அவரும் நன்றாக இருக்கிறார். நானும் நன்றாக  இருக்கிறேன் என்று சொல்லி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை மதுமிதா.


Advertisement

Advertisement