• Dec 26 2024

சமந்தா வீட்டில் நடந்த தடபுடல் கல்யாணம்.. யாருக்கு தெரியுமா? இணையத்தில் வைரல் போட்டோஸ்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் நடிகை சமந்தா. இவர் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என தென்னிந்திய சினிமாவில் ரவுண்டு கட்டி நடித்து வருகின்றார். அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட போதும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் சமந்தாவின் மூத்த சகோதரனின் திருமணம் விஸ்கான்சிங் ஜெனிவா ஏரியில் நடைபெற்றுள்ளது. இதில் சமந்தா தனது தாயார் மற்றும் அப்பா, அண்ணனுடன் ஊதா நிற ஸ்லிப்லஸ் அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தை கவர்ந்து வருகின்றன.

மேலும் சமந்தா அணிந்த உடைக்கு ஏற்றவாறு தனது தலை முடியை தயார் செய்து ஜெனிவா ஏரியின் அழகிய பின்னணியில் கையில் பூக்களுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.


சென்னையை சேர்ந்த தமிழ் பெண்ணான இவர், பானா காத்தாடி, பிருந்தாவனம், நீதான் என் பொன்வசந்தம், ஓ பேபி, யசோதா, குஷி என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார். மேலும் தற்போது படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ்லும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.


Advertisement

Advertisement