• Oct 26 2024

கெத்தாக ரெடியாகும் அட்டகத்தி தினேஷ்! படக்குழு வெளியிட்ட வீடியோ! பாராட்டும் ரசிகர்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த படம் 'லப்பர் பந்து' . கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட இந்தக்கதையில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.


ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தினேஷ் 'கெத்து' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 


படத்தை பார்த்த பெரும்பாலானோர் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக புக் செய்யப்பட்டு வருகிறது.  தற்பொழுது நடிகர் அட்டக்கத்தி தினேஷ் எப்படி இந்த கெத்து கதாப்பாத்திரத்திற்காக அவர் பயிற்சி செய்தார் என்பதை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ..


Advertisement