இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர்கள் பலர் உள்ளனர். அதில் மிக முக்கியமானவர் தான் தர்ஷா குப்தா. போட்டோஷூட் மற்றும் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ள அவர், தற்போது தனிப்பட்ட சப்ஸ்கிரப்ஸன் வசதியையும் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்த புதிய முயற்சி, அவருக்குப் பெரும் வருமானத்தைக் கொடுத்துள்ளது.
தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பயணத்தை ஒரு சாமான்ய மாடலாக ஆரம்பித்தவர். ஆரம்பத்தில் பேஷன், டிரெண்டி உடைகள், மற்றும் பிரபல போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்த இவர், தனது ஸ்டைலிஷ் லுக்கால் அதிகளவான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார்.
இன்ஸ்டாகிராமில் அவரின் பக்கத்தை தொடர்ந்து பார்த்தால், அவர் புகைப்படங்கள், ரீல்ஸ் குறித்த பதிவுகள் மூலம் ரசிகர்களை எவ்வாறு ஈர்க்கிறார் என்பதை நன்கு புரிந்துகொள்ளலாம். இவரது ஒவ்வொரு பதிவும் விரைவில் வைரலாகி, லைக் மற்றும் கமெண்ட்ஸ் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமடைகிறது.
தற்பொழுது வெளியான தகவலின் படி, இன்ஸ்டாகிராமில் ஒரு சப்ஸ்கிரப்ஸ்ஸனுக்கு 499 வீதம் மொத்தம் 759 சப்ரைபர்ஸ் மூலம் ஒரு மாதத்திற்கு மட்டும் 3,50,000 வருமானத்தை தர்ஷா பெறுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!