• Jan 12 2025

விவாகரத்தான நடிகருக்கு ரூட்டு விடும் டிடி.. அவருக்கும் ஓகேனா டும்.. டும்.. தானாம்!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமான நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமாக காணப்படுபவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் ரசிகர்களால் செல்லமாக டிடி என அழைக்கப்படுகிறார்.

இவர் ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானார். அவர் தொகுப்பாளியாக மட்டுமில்லாமல் நடிகையாகவும் சினிமாவின் தலைகாட்டி வருகின்றார்.

அதன்படி தனுஷின் பா.பாண்டி படம், கௌதம் மேனன் இயக்கிய ஜோஸ்வா, காபி வித் காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  அத்துடன் தற்போது உருவாகும் துருவ நட்சத்திரம் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றார்.


2014ஆம் ஆண்டு தொகுப்பாளியாக திகழும் டிடிக்கு திருமணம் நடை பெற்றது. அவர் தனது நண்பனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை மூன்று ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதற்குப் பிறகு தனது கணவரை விவாகரத்து செய்த டிடி, தனது கவனத்தை தன் கெரியரில் செலுத்தினார். பின்பு காலில் ஏற்பட பிரச்சனை காரணமாக விஜய் டிவியில் இருந்து விலகினார்.


இந்த நிலையில், தற்போது ஆடியோ லான்ஞ்ச் நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கும் டிடி, அடிக்கடி இன்ஸ்டாவில் தனது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


அதில், தனக்கு விவாகரத்தான நடிகர் மீது கிரஷ் உள்ளது என்பதை வெளிப்படையாகவே இன்ஸ்டாவில் கூறியுள்ளார். அதாவது ஹாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது தனக்கு கிரஷ் உள்ளதாக கூறிய டிடி, அவரை திருமணம் செய்து கொள்ளவும் தயாராக இருப்பதாக கூறினார். ஆனாலும் அவர் ஓகே சொல்வாரா இல்லையா என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இதேவேளை, நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது மனைவியை விவாகரத்து செய்து,  தற்போது சபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement